Tuesday, 18 June 2019

வண்ணம் இரண்டு

கூர்க்கத்தி

தீடீர் என்று ஒரு கற்பனை எண்ணம்
உடல் பிளந்து இருதயம் கிழித்தால் என்ன உணர்வு என்ன வலி இருக்கும் என்று!
ஒரு மருத்துவர் அவ்வலி குறித்து விளக்கிய போது
அவ்வலி அனுபவிக்க அசட்டு ஆசை!
கூர் கத்தி ஓன்று எடுத்து
கரம் நடுங்க பிடித்து தயக்கம் கடந்து
உடல் பிளந்து ரத்தம் சொட்ட இதயம் கிழித்து அனுபவித்து விடலாமா அவ்வலியை!
மரணித்து விட்டால்! ஐயோ வேண்டாம்!
எதற்கு இந்த விபரீத ஆசை!
-விட்டொளி! அளித்து விடு எண்ணத்தை! அச்சமயம்
வெண் சிறகு கொண்ட வான் தேவதை ஒருத்தி வந்தாள்- நொடிப்பொழுதில்
கரு விழி அசைவில் காதல் கொள்ள செய்தால்
காதல் பொழுதுகள் சொட்ட சொட்ட திகட்ட திகட்ட தந்தாள்- பருகி
மயங்கி தளர்ந்து அவள் மடி மீது விழ
கூர் கத்தி இன்றி
உடல் பிளக்காமல் ரத்தம் சிந்தாமல்
மிருதுவான அவள் கரங்களால்
இருதயம் எடுத்து கிழித்து எறிந்தாள்
சொல்லி கொள்ள முடியாத வலி
கரைபுரண்ட ஓடிய கண்ணீர் - என்னை அறியாமல்
இதழ் ஓரத்தில் புன்னகை நெடுநாள் ஆசை வலி உணர்ந்த சந்தோசம்
நன்றி உரைக்கும் முன் கடந்து சென்றது அந்த தேவதை!
இருதயம் கிழிக்கப்பட்டால் உயிர் விட்டுஒழியும் என்றார் மருத்துவர்!
ஒரே ஐயம் என் உடல் உள்ளெ உயிர் உள்ளதா என்று- அதுவும்
பளிச் என்று முகத்தில் தண்ணீர் அடிக்க படும் வரை!
"எழுந்து வேலைக்கு போடா " அம்மா
கனவா !!!
போன் ஒலித்தது "ஓ அந்த வான் தேவதை"
"எடுக்க பிடாது" மனது சொன்னது
இருதயம் பிளக்க படுவது கொடும் வலி அதர்கே இந்த அழைப்பு!
என்ன சொல்லி என்ன
"ஹலோ சொல்லுடா"
"இன்னைக்கு மீட் பண்ணலாமா!"
"பண்ணலாமே" கூர் கத்தி பள பள வென மின்னியது!

#அஜித்