Thursday, 9 February 2017

வண்ணம் ஓன்று

என்னவனே!
உன் அக கூட்டினுள் களித்து மகிழ்ந்து 
உன் சுவாசத்தோடு ஆடி பாடி திரிந்த என் நினைவுகள் 
உனக்கு மிகு வலி தந்து,-அன்பே 
உன் உயிர் பிரித்து வந்த என் நினைவுகளை
உன் உயிரோடு என் காதலோடு
உன்னிடமே திருப்பி அனுப்புகிறேன்
உனை என்னுள் புதைத்து வைக்கும்
உரிமையை கூட பறித்தது விட்டது இந்த சமூகம்
உன்னுடனே வைத்துக்கொள் என் நினைவுகளையும்
உன் உயிரையும் என் காதலையும்!- அன்போடு
உன் நினைவுகளோடு கூட வாழ முடியாத
பட்டாம்பூச்சி
#ajith

No comments:

Post a Comment